ஆடிப்பெருக்கு எதிரொலி... தமிழகத்தில் பூக்கள், பழங்களின் விலை கடும் உயர்வு!

 
மல்லிகைப்பூ மல்லிகை பூ

தமிழகத்தில் நிலவும் கடுமையான வெயில், பருவநிலை மாற்றம் மற்றும் வரவிருக்கும் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, சந்தைகளில் பூக்கள் மற்றும் பழங்களின் வரத்து குறைந்து அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

மலர் பூ மார்க்கெட் சந்தை

பூக்களின் விலை மல்லிகைப் பூ: ரூ. 700 முதல் ரூ. 1,000 வரை, முல்லை மற்றும் பிச்சி பூ: ரூ. 300 முதல் ரூ. 500 வரை, ரோஜா & செவ்வந்தி: ரூ. 150 முதல் ரூ. 300 வரை என கடுமையான வெப்பம் காரணமாகப் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விழாக்காலத் தேவை அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூ மலர்ச்சந்தை

ஆடிப்பெருக்கு வழிபாட்டிற்கு முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்படும் வாழைத்தார்களின் விலையும் சந்தையில் அதிகரித்துள்ளது. பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 550 வரை விற்பனையாகிறது. பச்சைநாடன் வாழைத்தார் ரூ. 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாகப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.