கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.... மாணவர் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு!

 
ஜோதிகா

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக பிரபல நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், நீட் விவகாரத்தில் எழுந்துள்ள குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

"நான் மாணவர்களுடனும், இந்த நாட்டின் எதிர்காலத்துடனும் எப்போதும் துணை நிற்கிறேன்" எனத் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வரும் இளைஞர்களைப் பாராட்டிப் பேசியுள்ள அவர்,  "இன்றைய தாய்மார்கள் அனைவரும் அபிஜித், சவ்ரவ் போன்ற தைரியமான மற்றும் சமூகப் பொறுப்புள்ள பிள்ளைகளையே வளர்க்க விரும்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுக்கும் இந்த 'Gen-Z' தலைமுறையினரைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நடிகை ஜோதிகாவின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, மாணவர் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.