12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்16ல் தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்த 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 இடங்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு இடத்திற்கும் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினமே நடைபெற உள்ளது.

உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 25-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதை அடுத்து, இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுளது.
வாக்குப்பதிவு நாள்: அக்டோபர் 16. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்குத் தொடங்கி நடைபெறும்.
