பாஜகவில் சேரலன்னா ரெய்டும், சிறையும் தான் ... அமைச்சர் பரபரப்பு பேட்டி!

 
அதிஷி
 

இந்தியாவில் ஒரு புறம் மக்களவை தேர்தல் , தீவிர பிரச்சாரம். மறுபுறம் தலைநகர் டெல்லியில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என பரபரப்புக்கு பஞ்சமில்லாத தகவல்கள் என றெக்கை கட்டி பறக்கின்றனர் ஊடகவியலர்.  டெல்லியில்  புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர்டே  முதல்வராகத் தொடர்வார் என்கின்றது ஆம் ஆத்மி.  
கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி உத்தரவுகளைப் பிறப்பித்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் இது குறித்து இன்று  டெல்லி அமைச்சர் அதிஷி சில பரபர கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில்  ’கெஜ்ரிவாலுக்கு பிறகு இப்போது அமலாக்கத் துறை தன்னை கைது செய்யத் திட்டம் போட்டு உள்ளது.

அதிஷி

 அவருடன்  சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா ஆகிய ஆம் ஆத்மி தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்யத் திட்டம் போட்டு வருவதாக பரபர தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும்  "விரைவில் எங்களின் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தி நாங்களும்  காவலில் வைக்கப்படுவோம்.  கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக  பாஜக இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களைக் குறிவைக்கிறது.
“எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக எனது நெருங்கிய உதவியாளர் மூலம் பா.ஜ.க. என்னை அணுகியது. நான் பா.ஜ.க.வில் சேரவில்லை என்றால் அடுத்த ஒரு மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்களான சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சாட் ஆகியோரை கைது செய்வார்கள்.

அதிஷி

நேற்று அமலாக்கத்துறை சவுரப் பரத்வாஜ் மற்றும் எனது பெயரை (அதிஷி) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகளாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யிடம் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த தகவல்களை கூறுகிறேன்.  இதனைக் கூறுவதற்கு காரணம் என்ன. அரவிந்த் கெஜ்ரிவால் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது. இதனை பாஜக ஒத்துக்கொண்டதே தற்போதைய நடவடிக்கைகளுக்கான காரணம். ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட தலைமை நிர்வாகிகளை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இத்தகவல்கள் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web