திரையுலகில் பரபரப்பு... வைரமுத்துவிடம் மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா ஆவேசம்!

 
வைரமுத்து

கடந்த இரு தினங்களாக தமிழ் திரையுலகில் மன்சூர் அலிகான் குறித்து தான் விவாதமாக இருக்கிறது. த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசிய பேச்சு, வரம்பு மீறியிருக்கிறது என்று ஆளாளுக்கு கருத்து சொல்ல, நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக நடிகர்கள் விஜய், ரஜினி எல்லாம் இப்படி பேசியிருக்கிறார்கள். மன்சூர் அலிகான் பேசியது தவறென்றால், ரஜினி, விஜய் பேசியது தப்பு தான் என்கிற குரல்களும் ஒலிக்கின்றன. விஜய் பேசியதாவது தனிப்பட்ட நபரிடம். பொதுமேடையிலேயே ரஜினி, நடிகை தமன்னா குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

த்ரிஷா

இந்நிலையில், பல வருடங்களாக வைரமுத்து மீது சுமத்தப்பட்டு வந்த மீ டூ புகார்கள் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளன. பாடகி சின்மயி குற்றச்சாட்டின் மீது கவிபேரரசு வைரமுத்துவை முதலில் மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

நடிகர் மன்சூர் அலிகானுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால், கவிஞர் வைரமுத்துவுக்கும் தானே பாட்டெழுத தடை விதிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 

ஹெச்.ராஜா

இந்நிலையில், ‘’முதலில் வைரமுத்து மீது, சின்மயி அவர்களின் குற்றச்சாட்டின் அடிப்படையில் மகளிர் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்’’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்து திராவிட போராளி என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டிருக்கிறார் என பாடகி சின்மயி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web