நெகிழ்ச்சி வீடியோ!! தந்தையின் உடலை சுமந்து சென்ற பிரபல நடிகை!!

 
அங்கிதா அங்கிதா

பாலிவுட் திரையுலகில்   பிரபல நடிகை அங்கிதா லோகண்டே. இவர்  இந்தியாவின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டு பின்னர்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். கடந்த 2009ல்   மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்ஹ்டு  'பவித்ரா ரிஷ்தா' என்ற பிரபலமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்றார். 'மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி' தான் அங்கிதா நடித்த முதல் படம்.

இதன் பின் ரன்தீப் ஹூடாவுடன் சுதந்திர வீர் சாவர்க்கரில் நடித்து வருகிறார். வீர் சாவர்க்கரின் மனைவி யமுனாபாய் வேடத்தில் அங்கிதா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்ட   நடிகை அங்கிதாவின் தந்தை ஷஷிகாந்த் லோகண்டே. இவருக்கு வயது 68.  இவர் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். உடல் நலக்குறைவு காரணமாக  நேற்று முன்தினம் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு மும்பையில் உள்ள ஒஷிவாராவில் நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில்  அங்கிதாவும் , அவரது தாய் வந்தனா பாண்டிஸ் லோகண்டேவும் கலந்து கொன்டனர்.
ஆம்புலன்ஸில் இருந்து மயானத்தில் இறக்கப்பட்ட  ஷஷிகாந்த் உடலை  அங்கிதா சுமந்து சென்றார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.  அங்கிதா தனது தந்தையிடம்   அளவிட முடியாத பாசம் கொண்டவர் .அடிக்கடி   தனது தந்தையுடன் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!