இணையத்தில் வலம் வந்த பிரபல சர்ச்சை நடிகை.. அதிரடியாக கைது செய்த போலீசார்..!!

சர்ச்சை நடிகை உர்ஃபி ஜாவெத் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல இந்தி தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவெத். அசாதாரணமான பேஷன் சென்ஸ் மற்றும் துணிச்சலான உடை தேர்வுகளுக்கு பிரபலமான உர்ஃபி ஜாவேத் இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தாலும் மறுபுறம் அவரை இணையவாசிகள் ட்ரோல் செய்தும் வருகிறார்கள் . பாட்டில் மூடிகளால் செய்யப்பட்ட ஆடை அணிவது, ப்ளேடால் செய்யப்பட்ட ஆடைகள், கயிறு, பூக்கள் , ரோஜா இதழ்கள் என வித்தியாசமான ஆடைகளை அணிந்து இணையதளத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறார்.
இந்த நிலையில் , தற்போது இணையதளத்தில் உர்ஃபி ஜாவெத் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்படும் வீடியோ இணையதளத்தில் வைராகி வருகிறது. பிரபல புகைப்பட கலைஞரான விரால் பயானி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில் மும்பையில் இருக்கும் கஃபே ஒன்றில் காஃபி குடித்துக் கொண்டிருந்த உர்ஃபியை இரண்டு பெண் போலீஸ் கைது செய்தனர்.
ஒழுங்கற்ற ஆடைகளை அணிந்திருந்ததால் அவரை கைது செய்வதாக காவல் துறை சார்பின் விளக்கம் அளிக்கப் பட்டது. இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது