கதறும் விவசாயி... தண்ணீர் இல்லாமல் சென்ற தீயணைப்பு வீரர்கள்... கருகி வீணாய் போன போன 3 ஏக்கர் கரும்புத்தோட்டம்!

 
தோட்டம் தீ விபத்து எரிந்து  நாசம்

எதற்காக செய்கிறோம் என்று தெரியாமலே அரசு ஊழியர்கள் பலரும் இன்னமும் நாற்காலியைத் தேய்த்து கொண்டு அரசாங்க சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதைப் பலரும் பல இடங்களில் பார்த்திருப்போம். வெகு சிலர் இப்படி மேம்போக்காக வேலைப் பார்த்து? ( எங்கே பார்க்கிறாங்க?) வந்தாலும் நிஜமாகவே அக்கறையுடனும், அனுசரணையுடனும் வேலைப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.  இது அவர்களைப் பற்றிய செய்தியல்ல.

திருப்பத்தூர் மாவட்டம் கல்லரைப்பட்டி கிராமத்தில், கரும்புத் தோட்டத்தில் தீப்பிடித்ததாக தீயணைப்பு வீரர்களுக்கு அவசர தகவல் அனுப்பிய விவசாயி, சாவகாசமாக வந்து சேர்ந்தவர்கள் மிச்சம் மீதியையாவது காப்பாற்றி தருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், 5 நிமிஷத்துல தண்ணீர் காலி என்று கையைப் பிசைந்த வீரர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தப்படி தன் கருகிக் கொண்டிருக்கும் தோட்டத்தைப் பார்த்து கதறியழுதிருக்கிறார் காதர் பாட்ஷா.

வாணியம்பாடி கல்லரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காதர் பாஷா, தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரும்புகள் வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில், அறுவடைக்கு ஆள் கிடைக்காததால் அறுவடை செய்ய ஆள் தேடி வந்தார். இந்நிலையில் திடீரென கரும்புக்காட்டில் தீப்பிடித்து எரிந்தது கண்டு பதறிய காதர் பாஷாவும் அவரது குடும்பத்தினரும் தீயை அணைக்க முயன்ற போதும், தீயை கட்டுப்படுத்த முடியாததால், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

காதர் பாஷா என்ற விவசாயியின் கரும்புக்காட்டில் தீவிபத்து

தகவல் தெரிவித்து 45 நிமிடங்கள் தாமதமாக வந்த தீயணைப்பு வாகனம், அடுத்த 5 நிமிடத்திலேயே தண்ணீர் தீர்ந்து போச்சு என்று தீயணைப்பு வீரர்கள் கையைப் பிசைந்துள்ளனர். இதனால் தீ கட்டுப்படுத்த முடியாமல், அடுத்தடுத்து பரவி 3 ஏக்கரில் கரும்பையும் கபளீகரம் செய்தது. காதர் பாஷாவும் அவரது குடும்பத்தினரும் பற்றி எரிந்த கரும்புத் தோட்டத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறியழுத காட்சி பார்ப்போரை கலங்க செய்தது.

தீயணைப்பு வாகனம் போதிய தண்ணீர் இன்றி வந்ததாக புகார்

இதனிடையே தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணிக்கு தயாராக வராமல், தண்ணீரின்றி வந்ததே முழு காடும் எரிந்து நாசமானதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வேளாண் நிலங்களில் தீ ஏற்பட்டால், அதனை அணைக்க உரிய முன்னேற்பாடுகளுடன் தீயணைப்பு வாகனங்களை எடுத்து வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web