அதிவேகத்தில் நாக்-அவுட் செய்தவர்... முன்னாள் குத்துச்சண்டை உலக சாம்பியன் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
Aug 23, 2026, 06:50 IST
அதிவேகமாக 11 வினாடிகளிலேயே நாக்-அவுட் செய்து கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பிடித்திருந்த பிரபல குத்துச்சண்டை வீரர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குத்துசண்டை விளையாட்டின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான ஜொலானி டெட்டே, அவரது வீட்டினருகே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த 2007-2008 மற்றும் 2017 - 2019 வரையிலான காலகட்டங்களில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர்ன் கேப் நகரில் உள்ள தனது வீட்டின் வாசலில் காரில் காத்திருந்தபோது, முகமூடி அணிந்து வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் காரில் இருந்த இளம்பெண் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மட்டைப்பந்து போட்டியில் மிக விரைவாக 11 விநாடிகளில் எதிராளியை வீழ்த்தி கின்னஸ் சாதனை படைத்தவர் டெட்டே என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்துத் தென்ஆப்பிரிக்க அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
