இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப் போகுது... 15 வருஷங்களுக்கு பின் ராகு புதன் சேர்க்கை! என்னென்ன மாற்றங்கள் நிகழும்!

 
புதன்

இத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு, துன்பங்களை மட்டுமே அனுபவித்து வந்தவர்களின் தலையெழுத்தே மாறப் போகுது. 15 ஆண்டுகளுக்குப் பின் ராகு, புதன் சேர்க்கையால் உங்கள் துன்பங்கள் எல்லாம் பனி போல உருகி விலகப் போகிறது. இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கோங்க.

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு விதமான பலன்களை தருகிறார்கள். ராகு பகவான் அசுப கிரகமாக கருதப்படுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசியினருக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அதிலும்  எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கும் ராகு பகவானால் பலருக்கும் அச்சமே.  நவக்கிரகங்களில் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக இடம் மாறக்கூடியவர்  ராகு பகவான் .

ஒரு ராசியில் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதி முதல் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார்.  இந்த ஆண்டு முழுவதும் மீன ராசியிலேயே பயணம் செய்வார்.  நவக்கிரகங்களில் இளவரசனாக  திகழ்பவர் புதன் பகவான். குழந்தைகளின் கல்வி, அறிவு, செல்வம், புத்திக்கூர்மை ஆகியவைகளுக்கு  காரணியாக திகழ்பவர் புதன் பகவான் தான். மிக மிக குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றிக் கொள்ளக்கூடியவர் புதன் பகவான்.

அடுத்து வரக்கூடிய மார்ச் மாதத்தில் புதன் பகவான், மீன ராசியில் நுழைகின்றார். இதன் காரணமாக ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ இருக்கிறது. ராகுவும் புதனும் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு  இணைய உள்ளனர். இதனால் 12 ராசிகளிலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றாலும்  குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடப் போகிறது.  

ராகு புதன்

மிதுன ராசி
 
மிதுன ராசியில் 10ம் இடத்தில் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் தொழிலில் அபிவிருத்தி உருவாகும். நினைத்த காரியம் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிட்டும். பாராட்டுக்களை பெறலாம்.உறவினர்களால் ஆதாயம் பெருகும்.  இந்த காலகட்டத்தில்  தொழிலில் எதிர்பாராத வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. வணிகத்தில், விரும்பிய முன்னேற்றத்தைப் பெறலாம். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் பெருகும்.  

கடக ராசி

கடக ராசியில் 9வது இடத்தில் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். ஆன்மிகத்தில் கடக ராசிக்காரர்களுக்கு நாட்டம் பெருகும். இதுநாள் வரையில் இழுபறியாக இருந்த வழக்குகள் இனி சுபமாக முடிவடையும். கடக ராசியினர் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள்  தேடி வரும். புதிய முயற்சியில் வெற்றி பெறலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் நீங்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். சேமிப்புக்கள் உயரும். 

ராசி யோகம் அதிர்ஷ்டம்

கும்ப ராசி
 
கும்ப ராசியில் 2வது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ இருக்கின்றது. இதனால் திடீர் பணவரவு கொட்டும். எதிர்பாராத நேரத்தில் வந்து அனைத்து துன்பங்களும் தீர இருக்கிறது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி  மேன்மை பெருகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். பொன் பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். கடன் தொல்லைகள் தீரும்.  சுபகாரியம் கைகூடும். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சுப முடிவுக்கு வரும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web