சொத்து பிரச்சனை.. மாமனார் அடியாட்களோடு தந்தையை தாக்கிய கொடூர மகன்..!

 
 ராஜா - விஜயா

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள தாமரை நகரைச் சேர்ந்தவர்கள் ராஜா - விஜயா தம்பதி. இவர்களுக்கு தமிழழகன் என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், 2022ஆம் ஆண்டு தமிழழகன் சிந்துஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தந்தை ராஜா  நிலத்தை விற்று 25 லட்சம் ரூபாயை மகன் தமிழழகனிடம் தொழிலுக்காக கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை தமிழழகன் வியாபாரம் செய்யாமல் ஊதாரித்தனமாக செலவு செய்ததாக கூறப்படுகிறது.

வலங்கைமான்: மூலால் வாஞ்சேரியில் பால்பண்ணை உரிமையாளரை கம்பியால் தாக்கி கொலை  மிரட்டல் விடுத்த முன்னாள் ஊழியர் கைது.|Inshorts

இதுகுறித்து தந்தை ராஜா விளக்கம் கேட்டதாக தெரிகிறது. இதற்கிடையில், ராஜா தனது இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் போது, ​​தமிழழகனின் மாமனார் தனது மருமகன் தமிழழகன் மற்றும் மகள் சிந்துஜாவுக்கு அவரது வீட்டை எழுதித் தரும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு ராஜா சம்மதிக்காததால், மாமனார் மற்றும் அடியாட்களுடன் வீட்டிற்கு சென்ற தமிழழகன் , பூட்டை உடைத்து தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.

மறுபுறம் அவரது மனைவி  தமிழழகனின் தங்கை தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளினர். இதனால் காயமடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜா, தனது மனைவி மற்றும் மகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web