தமிழக அரசின் நிதிநிலை... இன்று மாலை வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்!

 
அமைச்சர் மரிய வில்சன் நிதியமைச்சர் அமைச்சர் மரிய வில்சன் நிதியமைச்சர்

தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை 5.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார். முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு வெளியிடப்படும் முதல் வெள்ளை அறிக்கை இது என்பதால், அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரும் ஜூன் 18-ஆம் தேதி தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போதும், முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பின்னரும் தமிழக அரசின் உண்மையான நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆட்சிப் பொறுப்பேற்றுச் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிக்கை தற்போது வெளியாகிறது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

நிதி அமைச்சக வட்டாரங்களின்படி, இன்று மாலை வெளியிடப்படவுள்ள வெள்ளை அறிக்கையில், தமிழக அரசின் தற்போதைய ஒட்டுமொத்தக் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதிநிலை குறித்த தற்போதைய எதார்த்த சூழல். கடந்த காலங்களின் வருவாய் ஆதாரங்கள், வரி வசூல் விபரங்கள் மற்றும் அரசு நிர்வாகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள். மகளிர் உரிமைத் தொகை (மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம்) உள்ளிட்ட தவெக அரசின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டுத் திட்டங்கள் ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், நிதியமைச்சர் மரிய வில்சன் இந்த வெள்ளை அறிக்கையின் முழு விபரங்களையும் விளக்கிப் பேசவுள்ளார். இதன் மூலம் அடுத்த சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள மாநில பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் நிதி மேலாண்மைக்கான அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் ஓரளவிற்குத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.