காளான் பண்ணையை எரித்து சாம்பலாக்கிய தீயணைப்பு துறையினர்.. கதறும் பண்ணை ஓனர்..!

 
காளாண் பண்ணையில் தீ விபத்து

காளான் பண்ணையின் மேற்கூறையில் இருந்த மலை தேனீக்களின் கூட்டை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினரின் அலட்சியத்தால் காளான் பண்ணை முற்றிலும் எரிந்து ஏழு லட்சம் ரூபாய் பொருட்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு இவர் வீட்டின் அருகாமையில் காளான் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தங்கவேலுவின் காளான் பண்ணை மேற்குறையில் மலை தேனீக்கள் தேன் கூடு காட்டியுள்ளது. இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சம் இருந்து வந்ததால் தங்கவேலு ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினரிடம் மலை தேனீக்களின் கூட்டை அகற்றுவதற்காக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் மலை தேனீக்களை தீப்பந்தம் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற தி.மு.க.  வேட்பாளர் | Ranipettai News DMK wins Kaveripakkam by a landslide Candidate

அப்பொழுது ஏற்பட்ட தீ பரவலால் காளான் பண்ணையில் மேற்கூரை மற்றும் காளான் பண்ணையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் தீயில் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது.தீயணைப்புத்துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணிக்கு பணியில் ஈடுபட்ட போதும் தீயினை கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

தவேப வேளாண் இணைய தளம் :: காளான் வளர்ப்பு

இந்தத் தீ விபத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டு இருப்பதாக காளான் பண்ணை உரிமையாளர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.மேலும் தீயணைப்பு துறையினரின் அலட்சியத்தால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தங்கவேலு மற்றும் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும்  மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார் மேலும் மலை தேனீக்கள் கூட்டை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை சார்ந்த குழுவினரிடம் நடைபெற்ற சம்பவ குறித்து முதற்கட்ட விசாரணையானது நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

From around the web