சூப்பர்... 110 கிமீ வேகத்தில் சென்னைக்கான முதல் ஏசி மின்சார ரயில் ...!

 
ஏசி மின்சார ரயில்

சென்னையில் புறநகர் ரயில்களை ஏசி மின்சார ரயில்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த வகையில் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவுப் பாதையில் ஏ.சி.மின்சார ரயிலை  இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே  2019ல்  பரிந்துரை செய்தது. இத்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஏ.சி. ரயில் இயக்கத்தின் தேவை, அதிக மக்கள் பயணிக்கும் ரயில் நிலையங்களின் பட்டியலையும் அனுப்பி வைத்தது.  இதையடுத்து, ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க சென்னை ஐ.சி.எஃப்-க்கு ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்தது.  

ரயில்


இதன் அடிப்படையில், சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்காக, 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி கடந்த மாதம் தொடங்கியது.  தற்போது, இந்த ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளது.இது குறித்து சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள்  , ''சென்னைக்கு இரண்டு ஏசி மின்சார ரயில் தயாரிக்க ரயில்வே வாரியம் உத்தரவிடப்பட்டது.

ரயில்

 அதன்படி தற்போது, முதல் ஏசி மின்சார ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் முழுமையாக குளிர்சாதன வசதியுடன் தயாரிக்கப்பட்டது.  12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி ரயிலில் மொத்தம் 1,116 பேர் அமர்ந்தும் ,  3,798 பேர் நின்று கொண்டும் பயணிக்கலாம்.  
அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பும் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். இந்த ரயில், தெற்கு ரயில்வேயிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது'' எனக் கூறியுள்ளார்.  இந்த ஏசி மின்சார ரயில் தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ரயிலாகும். இந்த ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!