காலையில் முதல் பொண்டாட்டி... மாலையில் 2வது பொண்டாட்டி... சிக்கித் தவிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஒரே நாளில் தனது இரு குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. இரண்டு மனைவிகளுக்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் சிக்கித் தவிப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை உணவக மற்றும் திரைப்பட வட்டாரத்தில் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ், இன்று காலை திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் இணைந்து கலந்து கொண்டார். அதே நாளில் மாலையில், ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜின் மகனான ராகாவின் முதலாவது பிறந்தநாள் விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் விழாவில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோருடன் இணைந்து அவரது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் பிள்ளைகளும் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சியைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினர் பலர் நேரில் கலந்துகொண்டு குழந்தைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே, மகனின் முதலாம் ஆண்டு பிறந்தநாளைக் குடும்பத்தினர் ஒன்றிணைந்து கொண்டாடிய நிகழ்வின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகின்றன.
