தவெக அரசின் முதல் பட்ஜெட்.... பெண்களுக்கான உதவித்தொகை உயர்வு?!

 
tvk

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5 தாக்கல் செய்கிறார். இந்த முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது. தமிழக மக்களின் நலனைக் காக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

இதில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுயதொழில் திட்டங்கள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் முதியோருக்கான உதவித்தொகை உயர்வு, அனைத்து அரசு பஸ்களிலும் மகளிர் இலவச பயணம் போன்ற திட்டங்களும் இடம்பெறலாம். பள்ளிக் கல்வித்துறையில் பல புதிய திட்டங்களும், ரூ.2,500 மகளிர் தொகை உயர்வு உள்ளிட்ட முக்கியத் தவெக வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சட்டசபை கூட்டணி கவிழுமா

தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் இந்த பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் வகையிலும் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த பட்ஜெட் அமையும் எனத் தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று வெளியிடப்படும் முழுமையான அறிவிப்புகளுக்காக அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.