நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. .இன்று பனையூரில் ஆலோசனைக் கூட்டம்!
தமிழகத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் இன்று நடைபெறுகிறது.
பனையூரில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ-க்கள்) மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். கூட்டத்தொடரின் போது சட்டசபையில் அரசின் புதிய மக்கள் நலத்திட்டங்களை எவ்வாறு முன்வைப்பது, நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் கொள்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

முதல் பட்ஜெட்டை வெற்றிகரமாகத் தாக்கல் செய்ய, முதலமைச்சர் விஜய் தலைமையில் கடந்த மாதம் முழுவதும் அனைத்துத் துறை வாரியாக விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிவு செய்யப்பட்டன. தவெக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பட்ஜெட்டை, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் நாளை சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையிலான முக்கிய அறிவிப்புகளும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
