'கங்குவா' முதல் அரைமணி நேரம் மோசம்... ஆனா ஏன் திட்டமிட்டு அவதூறு பரப்புறீங்க... நடிகை ஜோதிகா கொந்தளிப்பு!
இதை நான் சூர்யாவின் மனைவியாக சொல்லவில்லை.. ஒரு நடிகையாக சொல்கிறேன்.. 'கங்குவா' படம் முதல் அரை மணி நேரம் மட்டுமே நன்றாக வரவில்லை. சப்தமாக இருக்கிறது என்கிற கருத்தைக் கூட ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் படம் முதல் ஷோ முடிவதற்குள்ளாகவே படம் நல்லாயில்லை என்கிற விமர்சனங்கள் ஏன் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது?” என்று நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக கொந்தளித்துள்ளார்.
இதை எல்லாம் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? முதல் காட்சி படம் முழுவதுமாக முடிவடைவதற்குள் எப்படி இப்படி படம் நன்றாக இல்லை என்று தொடர்ந்து விமர்சனங்களைப் போடுறீங்க? மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்? படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
‘கங்குவா’ படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக நடிகை ஜோதிகா ஆவேசம் அடைந்துள்ளார். இந்த நெகட்டிவ் விமர்சனங்களில் படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கிற நல்ல விஷயங்களைக் குறித்து ஏன் யாருமே குறிப்பிடவில்லை என்று கொந்தளித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!