தெற்கு ஆசியாவில் முதல் முறை.. திருமணத்தை பதிவு செய்த லெஸ்பியன் ஜோடி..!

 
நேபாள லெஸ்பியன்

மேற்கு நேபாளத்தில் உள்ள பூர்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு தேவி ஸ்ரேஸ்தா. அவள் புனைப்பெயர் திப்தி. சியாங்ஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரிதா குருங். இருவரும் கடந்த 11ம் தேதி பார்டியா மாவட்டத்தின் ஜமுனா கிராமப்புற நகராட்சியில் முறைப்படி திருமணத்தை பதிவு செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Nepal Registers Same-Sex Marriage – A First | Human Rights Watch

ஓரினச்சேர்க்கை ஆர்வலரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் பாபு பாண்டா, 'தெற்காசியாவில் அதிகாரப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்த முதல் லெஸ்பியன் ஜோடி இவர்கள்தான்' என்றார். இதன் மூலம், ஒரே பாலின திருமணத்தை முறைப்படி பதிவு செய்த தெற்காசியாவில் முதல் நாடாக நேபாளம் மாறியுள்ளது.முன்னதாக, கடந்த ஆண்டு நேபாளத்தில் திருநங்கையான மாயா குருங் (35) மற்றும் ஓரினச்சேர்க்கையாளரான சுரேந்திர பாண்டே (27) ஆகியோருக்கு இடையே சட்டப்பூர்வ திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

நேபாளத்தின் உச்ச நீதிமன்றம் 2007 இல் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அனுமதித்தது. அதைத் தொடர்ந்து, 2015 இல் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு பாலினத் தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு இருக்கக்கூடாது என்று தெளிவாகக் கூறியது. இந்நிலையில் மாயா குருங் மற்றும் சுரேந்திர பாண்டே திருமணத்தை நேபாளத்தில் பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி ஜூன் 27ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஓரினச்சேர்க்கை திருமணத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான வரலாற்று உத்தரவு இருந்தபோதிலும், தேவையான சட்டங்கள் இல்லாததைக் காரணம் காட்டி, காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த நடவடிக்கையை நிராகரித்தது.

நேபாள லெஸ்பியன் ஜோடி

அப்போது சுரேந்திர பாண்டே மற்றும் மாயாவின் திருமண விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரே பாலின திருமணங்களை பதிவு செய்வதற்கு சட்ட அங்கீகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு 5 மாதங்களுக்குப் பிறகு, மாயா குருங் - சுரேந்திர பாண்டே திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web