முதல் வீரர்... ஐபிஎல் வரலாற்றில் 'கிங்' கோலி புதிய சாதனை!

 
கோலி கோலி

ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராகக் களம் இறங்கிய விராட் கோலி, டி20 கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இந்தப் போட்டியில் அவர் எடுத்த ரன்களின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இலக்கைத் துரத்தும்போது (Chasing) 4,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

சாதனைப் பட்டியல் (சேஸிங்கில் அதிக ரன்கள்):

ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் முதல் மூன்று இடங்கள்

வரிசை

வீரர்

சேஸிங்கில் எடுத்த ரன்கள்

1

விராட் கோலி (RCB)

4,000+ ரன்கள்

2

டேவிட் வார்னர்

3,285 ரன்கள்

3

ரோகித் சர்மா

3,238 ரன்கள்

ஐபிஎல்

ஐதராபாத் நிர்ணயித்த 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியபோது, கோலி தனது டிரேட்மார்க் ஷாட்கள் மூலம் ரன்களைக் குவித்தார். வார்னர் மற்றும் ரோகித் சர்மாவை விடச் சுமார் 700 ரன்கள் முன்னிலையில் இருக்கும் கோலி, 'சேஸிங் மாஸ்டர்' என்ற தனது பட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை நியாயம் செய்துள்ளார்.

முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணிக்கு, கோலியின் இந்த வரலாற்றுச் சாதனையும், அவரது அதிரடி ஆட்டமும் (69* ரன்கள்) வெற்றியை எளிதாக்கியது. 16 ஓவர்களுக்குள்ளேயே பெங்களூரு அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.