இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.. விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 11 விசைப்படகுகள் மீதான வழக்கை முடித்து வைக்காத காரணத்தினால், அப்போதைய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையின் கீழ் உள்ள வருவாய் துறை காவல் துறை மீன்வளத்துறை குழுவின் பரிந்துரைப்படி மாற்று தொழிலுக்கு உத்தரவு வழங்காததை கண்டித்து மீன்பிடி விசைப்படகுகள் இன்று முதல் காலவரை வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளதாக அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக மீன்பிடி துறைமுகம் நுழைவு வாயில் முன்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 5 மணிக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. 272 விசைப் படகுகளும் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் சுமார் 5,000 மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மீன்பிடி துறைமுகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!