வைரல் வீடியோ... விமானத்தில் பிரபல நடிகை மீது ஜூஸ் கொட்டிய விமானப் பணிப்பெண்!

 
சாரா
 

30,000 அடி உயரத்தில் விமானம் பறந்துக் கொண்டிருக்கிறது. இது எதிர்பாராமல் கை தவறுதலாக நிகழ்ந்த சம்பவம் தான். இத்தனைக் கோபப்பட்டிருக்க வேண்டாம். நடிகை எளிதில் இன்னொரு ஆடையை புதிதாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அவர் இதை சாதாரணமாக கடந்து செல்லாததால் அந்த விமானப்பணிப்பெண் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


விஷயம் இது தான். நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருக்கையில், விமானப் பணிப்பெண் தனது ஆடையில் ஜூஸைக்  கொட்டியதால் பிரபல நடிகை சாரா அலி கான் கோபமடைந்து இதைப் பெரிய பிரச்சனையாக்கி இருக்கிறார்.விமானத்தில் இருந்து இந்த எதிர்பாராத தருணம் வீடியோவாக வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் நடிகை சாரா அலி, சுருள் முடியுடன், பெரிய வளையக் காதணிகளுடன் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கிறார். அப்போது ஒரு விமானப் பணிப்பெண் தற்செயலாக தனது விலையுயர்ந்த உடையில் ஒரு கிளாஸ் ஜூஸைக் கொட்டியதால் அந்த இடத்தில் பரபரப்பாகிறது. 


உடனே எழுந்து நின்று கழிவறைக்குச் செல்வதற்கு முன் விமானப் பணிப்பெண்ணை முறைத்துப் பார்த்து விட்டு எதிர்வினையாற்றி விட்டு நடிகை சாரா அலி செல்கிறார். 
இன்ஸ்டாகிராமில் #SaraOutfitSpill என்ற ஹேஷ்டேக்குடன் இந்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு, ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டி வருகிறது. பலரும் இந்த சம்பவம் வணிக அல்லது திரைப்பட படப்பிடிப்பின் ஒரு பகுதியா என்று கேள்வியெழுப்பி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா