தொடரும் வெறிநாய்களின் அட்டகாசம்.. வெறிநாயால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!

 
குழந்தையை கடித்த வெறிநாய்
வேலூரில் குழந்தையை வெறிநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது 3 வயதில் அர்ஷன் என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில் நேற்று காலை தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த வெறிநாய் அர்ஷனை திடீரென கடித்து குதறியது. இதில் குழந்தையின் முகம் மற்றும் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

குழந்தையை கடித்த வெறிநாய்

இதனையடுத்து குழந்தையை கடித்த நாய் ஒரு மணி நேரத்தில் அதே பகுதியில் நூலகத்தில் பணிபுரியும் குழந்தையின் உறவினரான சுப்பிரமணி(48) என்பவரையும் நாய் கடித்து குதறியது. இதில் அவருக்கு கை, கால் மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வெறிநாய் அதேபகுதியில் உள்ள ஒரு பசு மாட்டையும் கடித்துள்ளது. வெறிநாய்களால் காயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாய் கடித்து 6 மாதங்களுக்கு பிறகு நாய் போல் குரைத்த தொழிலாளி | Tamil News A  worker who barked like a dog 6 months after being bitten by a dog in Odisha  was injured because

பேரணாம்பட்டு பகுதியில் வெறிநாய்கள் அதிகரித்து வருவதால் இதுப்போன்ற சம்பவம் அடிக்கடி நடைப்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில்  வெறிநாய்களை கட்டுப்படுத்துமாறு நகராட்சி நிர்வாகத்திடமும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்

From around the web