அணில் சேமியாவில் இறந்த தவளை.. ஷாக்கான வாடிக்கையாளர்..!!
Nov 14, 2023, 17:18 IST

சேமியா பாக்கெட்டில் இறந்த தவளை இருந்தது வாடிக்கையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் பூமிநாதன். தீபாளிக்கு முன்தினம் மளிகை கடைக்கு சென்று அணி சேமியா வாங்கியுள்ளார். அந்த சேமியை நேற்று பிரித்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சியடைந்தார். அதில், இறந்த நிலையில் தவளை ஒன்று கிடந்துள்ளது.
இதுதொடர்பாக மாளிகை கடைக்காரரிடம் வாடிக்கையாளர் முறையிட்டுள்ளார். பிரபல கம்பெனி என்பதால் வாங்கி விற்பனை செய்கிறேன் இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், இதனை அணில் சேமியா விற்பனை மேலாளர் தொழிற்சாலையில் தவறு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான அணில் அப்பளம் பாக்கெட்டை புழு இருந்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
From around the
web