அதிர்ச்சி!! திருமணமான காதலனை கத்தி முனையில் கடத்தி சென்ற காதலி!!

 
காதலி

சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் பார்த்திபன் இவருக்கு வயது 31. இவர்  தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த  ஜூலை மாதம் மென் பொறியாளர் பிரியாவை  திருமணம் செய்து கொண்டார்.நேற்று வழக்கம் போல் பார்த்திபன் வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பிய  போது காரில் வந்த ஒரு கும்பல் பார்த்திபனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் ஆஷா காரை வழிமறித்து நின்றார். ஆனால் கார் அவரை மோதி தள்ளிவிட்டு   நிற்காமல் சென்றது. காயமடைந்த ஆஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி காதல்


 பார்த்திபன் மனைவி பிரியா இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன்  சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மொபைல் போன் சிக்னல் இதன் அடிப்படையில்   தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அவரை காஞ்சிபுரத்தில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே தனிப்படை அமைக்கப்பட்டு   காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த பார்த்திபனை பத்திரமாக மீட்டனர். அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்கட்ட  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில்  கடத்தலில் ஈடுபட்டது பார்த்திபனின் முன்னாள் காதலி சௌந்தர்யா என்பது தெரிய வந்தது.


பார்த்திபன் கல்லூரியில் படிக்கும் போது ராணிப்பேட்டையில் வசித்து வரும் சௌந்தர்யாவை 7 வருடங்களாக காதலித்தார். சௌந்தர்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பார்த்திபனின் பெற்றோர்  அவரை திருமணம் செய்ய வேண்டாம் என கூறியதன் பேரில்  ஏப்ரல் மாதம் இருவரும் சுமுகமாக பேசி பிரிந்து சென்றனர். அதன் பிறகு தான்  பார்த்திபன் பிரியாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பழைய காதலை  மறக்க முடியாமல் சௌந்தர்யா  வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் தனது தாயாரிடம் இது குறித்து   அழுது புலம்பியுள்ளார்.

போலீஸ்
இதனைத் தொடர்ந்து காதலன் பார்த்திபனைக் கடத்தி சென்று திருமணம் செய்து கொள்ள  நினைத்த சௌந்தர்யா தனது குடும்பத்துடன் சேர்ந்து கடத்தல் திட்டம் தீட்டினார்.  சௌந்தர்யா தனது தாய் உமா,   மாமா மகனான துணை ராணுவ வீரர் ரமேஷ்  நங்கநல்லூர்   சித்தப்பா சிவகுமார் இவர்களுடன்  பார்த்திபனை காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள  கோயிலுக்கு அழைத்து சென்று கத்திமுனையில் பார்த்திபனை மிரட்டி சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சௌந்தர்யா, அவரது தாயார் உமா, உறவினர்கள் ரமேஷ் மற்றும் சிவகுமார்  என 4  பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஆயுதங்களால் காயம் விளைவித்தல், கடத்தல்  என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.    அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web