காதலனின் பெயரை நெத்தியில் பச்சைக்குத்திய காதலி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

 
ஆனா ஸ்டான்ஸ்கோவ்சகி

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய காதலரின் பெயரை தன் நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கிறார். இதை நெட்டிசன்கள் பலவிதமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதுபற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். காதலுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்? தங்களுடைய காதலை வெளிப்படுத்துவதற்காகவும், நிரூபிப்பதற்காகவும், பலவிதமான வேடிக்கையான விஷயங்களை செய்வார்கள். அதுபோலத்தான் சமீபத்தில் ஒரு பெண் இணையத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். இவருடைய பெயர் ஆனா ஸ்டான்ஸ்கோவ்சகி. இவர் ஒரு சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர். சமீபத்தில் இவர் தன்னுடைய காதலரின் பெயரை நெற்றியில் பெர்மனன்ட் டாட்டூவாக பச்சை குத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பெண் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் அவருடைய நெற்றியில் இவரது காதலரான 'கெவின்' என்ற பெயர் பச்சை குத்தியிருப்பது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவில் டாட்டூ கலைஞர் டாட்டூவை எப்படி வரைகிறார் என்பதும் பதிவாகி இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் அவருக்கு வலி மற்றும் அசௌகரியமாக உணர்ந்தால் கூட, டாட்டூ மிக அழகாக வந்திருப்பது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார். : மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து நடக்கும் ஆன்லைன் மோசடிகள்... சிக்காமல் இருப்பது எப்படி? அந்த வீடியோவில் 'என்னுடைய காதலன் பேரை நான் நிறைய பச்சை குத்தியிருக்கிறேன். அவருக்கு இது பிடிக்குமா?” என்ற கேப்ஷனையும் பகிர்ந்து இருக்கிறார் ஸ்டான்ஸ்கோவ்சகி. இது போன்ற வினோதமான வீடியோக்கள் இணைய தளத்தில் மிக மிக வேகமாக பகிரப்படும். அந்த வகையில் நெற்றியில் பச்சைக் குத்திக்கொண்ட இன்ஸ்டாகிராம் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டது. பலரும் இந்த டாட்டூ ஆர்டிஸ்ட் உண்மையான இங்க்கை பயன்படுத்தி டாட்டு போடவில்லை, இது போலியாக இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். மற்றொரு யூசர் இதை டாட்டு ஆர்டிஸ்ட் மற்றும் இந்த பெண்ணுக்கு அதிக ஃபாலோயர்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது என்று கமெண்ட் செய்துள்ளார்.

டாட்டூ போடும் காட்சிகளும் அந்த வீடியோவில் இருக்கிறது. ஆனால் அந்த டாட்டூ மிஷனில் ஊசியே இல்லை, ரத்தம் வரவில்லை, சிவந்து போகவில்லை என்று வேறு சில காரணங்களையும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து இந்த டாட்டூ போலியானது என்று கூறினார். இதில் வேறு சிலர், நெற்றியில் காதலரின் பெயரை பச்சை குத்திக் கொண்டால் பிரேக்அப் ஆகிவிடும் என்பது போன்ற சில மூட நம்பிக்கைகளையும் கூறியுள்ளனர். தன்னுடைய டாட்டூ உண்மையானது என்றும், இதை முடிவை நான் எடுத்தது என்னால் நம்பவே முடியவில்லை என்றும் ஆச்சரியமாக இருப்பதாகவும் ஸ்டான்ஸ்கோவ்சகி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் 'ஒவ்வொரு முறை கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் தன்னுடைய காதலனை பார்ப்பதாக இருக்கிறது. நீங்கள் யாரையாவது உண்மையாக நேசித்தால் அதை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். உங்கள் காதலி உங்கள் பெயரை பச்சை குத்திக் கொள்ளக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் புதிய காதலியைத்தான் தேடவேண்டும்' என்று விமர்சித்தவர்களுக்கு அடுத்து வெளியிட்ட வீடியோவில் அனா ஸ்டான்ஸ்கோவ்சகி பதிலளித்துள்ளார்.

From around the web