முன்னே சென்ற அரசு பேருந்து.. ஆத்திரத்தில் நடத்துனரை கொடூரமாக தாக்கிய தனியார் பேருந்து ஊழியர்கள்!

 
மாரியப்பன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை அரசு பேருந்து ஒன்று தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஐந்து நிமிடம் கழித்து அரசு பஸ்சின் பின்னால் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில், முன்னால் சென்ற அரசுப் பேருந்து மில்லு முக்கம், பாப்பாநாடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

அதன்பின், பின்னர் வந்த தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர், புலவன்காட்டில் அரசு பஸ் கண்டக்டரை திட்டி, வழிவிட கேட்டனர். அரசு பஸ் டிரைவர் வழிவிடாததால் ஆத்திரமடைந்த தனியார் பஸ் டிரைவர் மணிகண்டன் (30), கண்டக்டர் சசிகுமார் ஆகியோர் தஞ்சை தெம்மாங் குடிசை பகுதியில் நின்றிருந்த அரசு பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ் கண்டக்டர் மாரியப்பன் (40) இருவரையும் சமாதானம் செய்தார்.
 

ஆத்திரமடைந்த மணிகண்டன், சசிகுமார் இருவரும், மாரியப்பனை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டு, நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன், கண்டக்டர் சசிகுமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். தஞ்சாவூரில் நேற்று அரசு பஸ் கண்டக்டரை நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web