“நலன் காக்க அரசு என்றும் துணை நிற்கும்..” தேசிய பால் தினத்தையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து!
இந்திய வெண்மைப் புரட்சியின் நாயகன் டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளான தேசிய பால் தினத்தையொட்டி, பால் உற்பத்தியாளர்களுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாநில அரசு செயல்படுத்தி வரும் முக்கியத் திட்டங்களையும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறப் பெண்களின் சுயசார்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பால் உற்பத்தித் தன்னிறைவிற்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளில், அயராது உழைக்கும் பால் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
பால் உற்பத்தியாளர்களின் உரிமைகளையும் நலனையும் பாதுகாக்கத் தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.
