வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு தரும் தவெக அரசு... தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பிரம்மாண்ட திட்டம்!

 
வீடு

தமிழகத்தில் வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மக்கள், விதவைகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக் குறைந்த விலையிலும் வாடகை அடிப்படையிலும் வீடுகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டுவதற்காகத் தகுதியான கட்டடக்கலை ஆலோசகர்களைத் தேர்வு செய்ய அரசாங்கம் தற்போது விளம்பரம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

புரசைவாக்கம் (சென்னை) 5.53 ஏக்கர் பரப்பளவில் சுமார் 300 உயர்தரக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. நகரத்தின் மையப்பகுதியில் அமைவது நடுத்தர மக்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமையும். நெற்குன்றம் (சென்னை): 3.35 ஏக்கர் நிலப்பரப்பில் 228 பன்னடுக்குக் குடியிருப்புகள் உருவாக்கப்படவுள்ளன. கூத்தம்பாக்கம் (திருவள்ளூர்): 1.20 ஏக்கர் பரப்பளவில் புறநகர்ப் பகுதி மக்களுக்காக 112 பன்னடுக்கு வீடுகள் கட்டப்படவுள்ளன.

ஓமந்தூரார் அரசுத் தோட்டம் (சென்னை) அரசு ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்காக TNGRHS திட்டத்தின் கீழ் 76 வாடகை வீடுகள் அமைக்கப்படுகின்றன.

வீட்டுவசதி வீட்டு வாரியம்

அமைந்தகரை, அண்ணா நகர் மற்றும் திருவள்ளூர் பகுதிகள்: அமைந்தகரை, தரம்பாக்கம், சோழம்பேடு ஆகிய பகுதிகளில் பொருளாதரத்தில் பின்ங்கிய ஏழை எளிய மக்களுக்காக 149 + 66 என மொத்தம் 215 வீடுகள் கட்டப்படவுள்ளன. குறைந்த செலவில், வலுவான கட்டமைப்போடு, குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் வீடுகளை வடிவமைப்பதற்காகத் தகுதியான ஆலோசகர்களை அரசு தேர்வு செய்யவுள்ளது.

இத்திட்டம் கட்டுமான நிறுவனங்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமைவதோடு, சொந்த வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.