மாநில அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர்தான் ஆளுநர்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

 
ஆளுநர்

பஞ்சாப் சட்டமன்றத்தை கூட்ட மறுப்பதாக அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அதில், பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த ஆளுநர் தரப்பில் ஏற்கெனவே ஆளுநர் அனுமதி அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் கேட்ட சில விவரங்களை பஞ்சாப் முதலமைச்சர் தரவில்லை என மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மோத்தா வாதிட்டார்.

ஆளுநர்

இந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆளுநர் கேட்கும் விவரங்களை தரவேண்டியது முதலமைச்சரின் கடமை, அரசியலமைப்பு ரீதியான பதவியில் உள்ள முதல்வர், கடமையை செய்யவில்லை என்று கூறி ஆளுநர் கடமையை தட்டிக்கழிக்க முடியாது. இருப்பினும், முதலமைச்சர் விவரங்களை தரவில்லை என்பதை காரணம் காட்டி அமைச்சரவை முடிவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஆளுநர் என்ன விவரங்களைக் கேட்கிறாரோ அதனை மாநில அரசு வழங்க வேண்டும். அதேபோன்று மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

ஆளுநர்

அரசியல் கொள்கைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த பணி என்றால், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  
 

From around the web