சேலையைப் பிடித்திழுத்த மாப்பிள்ளையின் தம்பி... திருமணத்தை நிறுத்திய மணமகள் - காவல் நிலையத்தில் நடந்த திருப்பம்!

 
புதுமணப்பெண் கல்யாணம் திருமணம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், மாப்பிள்ளையின் தம்பியின் செயலால் சண்டை ஏற்பட்டுத் திருமணம் நிற்குமளவிற்குச் சென்று, பின்னர் காவல் நிலையத் தலையீட்டால் சுமுகமாக முடிவடைந்த விசித்திரச் சம்பவம் நடந்துள்ளது.

5வது திருமணம்

திருமணக் கொண்டாட்டத்தின் போது இருவீட்டாரும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மணமகனின் தம்பி மணமகளின் சேலை நுனியைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் தனது தாய்மாமாவிடம் கூறவே, அவர் மாப்பிள்ளை வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மதுபோதையில் இருந்த சிலர் இடையே புகுந்ததால் வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதில் மாப்பிள்ளையின் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த ரகளையால் கடும் கோபமடைந்த மணப்பெண், "எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை" எனக்கூறி அதிரடியாகத் திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து, இருதரப்பினரும் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தனர்.

கல்யாணம்

காவல் நிலைய அதிகாரிகள் இருவீட்டாரையும் அழைத்து அமைதியாகப் பேசிச் சமாதானம் செய்து வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மணமகள் வீட்டார் கோபம் தணிந்து திருமணத்திற்குச் சம்மதித்தனர்.

இறுதியில், அன்று மாலையே திட்டமிட்டபடி இருவருக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்து முடிந்தது. திருமண மண்டபத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.