பெங்களூரில் திக் திக் நிமிஷங்கள்.... 13 கி.மீ. மெட்ரோவில் பயணித்த இதயம்!

 
மெட்ரோ

அந்த 13 நிமிஷங்களுமே மனசுக்குள் லப் டப், திக் திக் நிமிஷங்கள் தான். ஒரு உயிரைக் காப்பாற்ற 13 நிமிடங்களில் மெட்ரோவில் 13 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கிறது இதயம். உலகம் முழுவதும் சமீப காலமாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உறுப்பு தானம் செய்து வருகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்தாலும் அதனை சரியான நேரத்தில் கொண்டு சென்று பொருத்துவதில் இதில் மருத்துவர்களின் பணி போற்றுதலுக்குரியது.

தற்போது அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. 13.கி.மீ தொலைவை 13 நிமிடங்களில் சென்று இதயத்தை உரிய நேரத்தில் பொருத்தி வாழ்வு அளித்துள்ளனர் மருத்துவ பணியாளர்கள். அவர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் பெரும் உதவி புரிந்துள்ளது.


எல்.பி. நகரின் காமினேனி மருத்துவமனையில் பெறப்பட்ட இதயத்தை லக்டிகாபுலில் உள்ள க்ளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். போக்குவரத்து மிகுந்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் உதவி உள்ளது.  

மெட்ரோ

13.கி.மீ. தொலைவை 13 நிமிடங்களில் சென்று அடைவதற்கு ஐதராபாத் மெட்ரோ ரயில் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இணைந்த  ஒத்துழைப்பு மூலம் சாத்தியமானது. இவை அனைத்தும் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web