கொடூரத்தின் உச்சம்.. காதலன் முன்னே காதலிக்கு பாலியல் கொடுமை செய்த காவல்துறையினர்..!

 
சிறுமிக்கு பாலியல் சீண்டல்
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 காவலர்களை சிறையில் அடைக்க  திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி முக்கொம்பு பகுதியில் கடந்த நான்குநாட்களுக்கு முன்பாக தனது காதலன் உடன் 17 வயது சிறுமி சென்றுள்ளார். அங்கு பயிற்சி பெறக்கூடிய சிறப்பு உதவி ஆய்வாளர், தேசிய நெடுஞ்சாலை காவல் பணியில் பணிபுரிய கூடிய நான்கு காவலர்கள்  மது அருந்தியுள்ளனர். அப்போது சிறுமியை பார்த்த அவர்கள் சிறுவனிடமும் சிறுமியிடமும் வம்பிழுத்துள்ளனர்.

பெண்களை `ஐட்டம்' என்பதும் பாலியல் சீண்டலே” : மும்பை நீதிமன்றம் தீர்ப்பு...  பின்னணி என்ன? | Calling woman as item amounts to outraging her modesty-  Mumbai Court - Vikatan

ஒரு கட்டத்திற்கு மெல் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஜீயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முசிறி, திருவெரும்பூர் காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். அனைவரையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதாக உறுதியெடுத்த காவலரே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web