கொடூரத்தின் உச்சம்.. 80 வயது மாமியாரை அடித்து இழுத்து சென்று குப்பைத் தொட்டியில் வீசிய மருமகள்!

 
80 வயது மாமியார்

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் மாவட்டத்தில் நேற்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. வயதான பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பல குழந்தைகள் உள்ளனர். மேலும், மாமியாரை மருமகள் தாக்குவது குறித்து அவ்வப்போது செய்திகள் வருகின்றன. ஆனால் மருமகள் தனது 80 வயது மாமியாரை வீட்டு வாசலில் இருந்து இழுத்து வந்து குப்பை கிடங்கில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிட்லகட்டா தாலுக்கா கொண்டபகாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடலட்சுமம்மா (80) என்பவர் தனது வீட்டின் முன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது மருமகள் லட்சுமிதேவம்மா, மாமியார் வெங்கடலட்சும்மாவை கொடூரமாக தாக்கி இழுத்துச் சென்று குப்பை கிடங்கில் வீசினார். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் லட்சுமிதேவம்மாவை கண்டித்தனர்.

இந்நிலையில், அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியை குப்பை கிடங்கில் வீசிய மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. முதியவர்களிடம் கருணை கூட காட்டாமல் மருமகள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட சம்பவம் ஷிட்லகட்டா தாலுகாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web