“கணவரைத் தனிக்குடித்தனம் வர வற்புறுத்துவது துன்புறுத்துவது” - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
தம்பதி காதல் காதலர்கள் புதுமாப்பிள்ளை புதுமணப்பெண்

ஒரே மகனாக உள்ள கணவரை, அவரது வயதான பெற்றோரைப் பிரிந்து தமனிக்குடித்தனம் வருமாறு வற்புறுத்துவது மனரீதியான கடுமையான துன்புறுத்தலுக்குச் சமம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காதல் காதலர்கள் பூங்கா கோவை கேக் மாஸ்டர்

விவாகரத்து கோரிய வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், குடும்ப நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய விவாகரத்துத் தீர்ப்பை முழுமையாக உறுதி செய்துள்ளது. கணவன் தன் பெற்றோருக்கு ஒரே மகனாக இருக்கும் பட்சத்தில், அவர்களை விட்டுத் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என மனைவி தொடர்ந்து வற்புறுத்துவது சட்டப்படி ஏற்புடையதல்ல என்றும் அது கணவருக்கு மனவேதனையைத் தரும் செயலாகும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

தாம்பத்திய வாழ்க்கை என்பது பரஸ்பர புரிதலின் அடிப்படையிலும் நம்பிக்கையிலுமே அமைய வேண்டும். ஆனால், காரணமின்றி அடிக்கடி பெற்றோர் வீட்டிற்குச் சென்று விடுவது மற்றும் கணவருக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது குடும்ப உறவில் கொடுமைக்குரிய செயலாகும் எனத் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.