உலகக் கோப்பை ஹாக்கி... 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி!

 
ஹாக்கி

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வின் நகரில் நடைபெற்று வரும் 16-வது உலகக் கோப்பை ஹாக்கித் தொடரின் லீக் ஆட்டத்தில், இந்திய அணி இங்கிலாந்திடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் நிகோலஸ் பண்டுராக் முதலாவது கோலை அடித்துத் தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதன் பின்னர் ஆக்ரோஷமாக ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்களைப் புகுத்தியது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 16-வது நிமிடத்திலும், தில்பிரீத் சிங் 24-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஹாக்கி

இரண்டாம் பாதியில் ஆதிக்கத்தைச் செலுத்திய இங்கிலாந்து அணி தொடர்ச்சியாகக் கோல்களைக் குவித்தது. ஸ்டூவர்ட் ரஷிமியர் 38-வது நிமிடத்திலும், ஹென்ரி கிராப்ட் 42-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

தொடர்ந்து 42-வது நிமிடத்திலேயே நிகோலஸ் பண்டுராக் மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தித் தொடரில் தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.