அடுத்த அதிர்ச்சி... பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை... சிகிச்சையளித்த போது கொடூரம்!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட நிலையில், அடுத்த அதிர்ச்சியாக சிகிச்சையளித்த பெண் மருத்துவரிடம் கும்பல் ஒன்று குடிபோதையில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் 6 பேர் கொண்ட கும்பல் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. மும்பையில் உள்ள சியான் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் முகத்தில் காயங்களுடன் வந்த ஒருவருக்கு பெண் மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தார். காயங்களுடன் வந்தவர் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள் 5 பேர் குடிபோதையில் இருந்தனர்.

அவர்கள் 5 பேரும் சிகிச்சை அளித்த டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முயன்ற பெண் மருத்துவர் காயம் அடைந்தார். உடனே அவர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார். தப்பியோடிய 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முழு நாள் மருத்துவ சேவைகள் நி்றுத்தப்பட்டது. இந்நிலையில், மும்பையில் இரவு பணியின் போது பெண் மருத்துவர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
