தொடரும் பயங்கரங்கள்!! இளம்பெண் துண்டு, துண்டாக வெட்டிக் கொலை!! திருமணம் செய்து தராததால் ஆத்திரம்!!

 
இளம்பெண்

விரும்பிய பெண் கிடைக்கவில்லை எனில் எங்கிருந்தாலும் வாழ்க என கூறிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. அவளை ரயிலில் தள்ளிவிடு, விஷம் வைத்து கொல்லு, வெட்டி நாய்களுக்கு வீசு, கொலை செய், ஆசிட் ஊற்று என கொடூரங்கள்  தான் அரங்கேறி வருகின்றன.  இது குறித்து எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் கொடூரங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.அதிலும் டெல்லியில் ஷரத்தா வழக்கை தொடர்ந்து அதே போல் தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது இளம் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புட்காம் மாவட்டத்தில் உள்ள சோய்பக் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் கடந்த மார்ச் 7-ம் தேதி முதல் காணவில்லை. இதைத் தொடர்ந்து போலீசில் அந்த பெண்ணின் சகோதரர் தன்வீக் அகமது கான் புகார் அளித்துள்ளார். தனது 30 வயது சகோதரி கோச்சிங் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர் புகார் கூறிய நிலையில், போலீசார் தேடத் தொடங்கியுள்ளனர்.

murder

அந்த பெண்ணுக்கு அறிமுகமானவரான ஷபீர் அகமது வானி (45) என்ற நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். பெண் கடைசியாக பேசி தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாக கொண்டு ஷபீரை பிடித்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பெண்ணை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி வீசியதாக பகீர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

தச்சு வேலை செய்யும் ஷபீருக்கு மயாமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை இருந்துள்ளது. பெண்ணின் உறவினர்களையும் பெண் கேட்டு அனுகியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அது அவருக்கு ஆத்திரமாக மனதில் தங்கியுள்ளது. பின்னர் வீட்டில் சில தச்சு வேலை செய்வதாக வந்து அந்த பெண்ணை சமீபத்தில் பார்த்துள்ளார்.

Police-arrest

இந்நிலையில், சம்பவ நாள் அன்று பெண்ணை கொலை செய்த ஷபீர், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி ஓம்பூரா பகுதியில் உள்ள பல இடங்களில் வீசியுள்ளார். ஷபீரை கைது செய்து வாக்குமூலத்தை பெற்ற போலீசார் இறந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு வருகின்றனர். 

From around the web