அனல் பறக்கும் பிரச்சாரம்... சூறாவளியாய் சுழலும் தலைவர்கள்.. இன்று மாலையுடன் நிறைவு!

 
தமிழகம் தேர்தல் தமிழகம் தேர்தல்

தேர்தல் திருவிழா உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 234 தொகுதிகளிலும் நாளை மறுதினம் ஏப்ரல் 23ம் தேதி வியாழக்கிழமை  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்கிறது. இன்று மாலை பிரச்சாரம் நிறைவு பெறுவதால் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தங்களுக்குச் சாதகமான இடங்களில் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்,

சீமான்

எடப்பாடி பழனிசாமி (அதிமுக) தனது கோட்டையான சேலம் எடப்பாடி தொகுதியில் பிரம்மாண்ட பேரணியுடன் பிரச்சாரத்தை முடிக்கிறார். விஜய் (தவெக) சென்னை நந்தனம் பகுதியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி, தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை எழுச்சியுடன் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

சீமான் (நாம் தமிழர்) சென்னையில் முக்கியத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்துவிட்டுத் தனது இறுதிக்கட்ட முழக்கத்தை முன்வைக்கிறார்.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளன. நாளை மாலை 5 மணிக்கு மேல் 75,064 வாக்குச்சாவடிகளிலும் தொகுதிக்குச் சம்பந்தமில்லாத நபர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 5.73 கோடி வாக்காளர்களுக்கும் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி 95% நிறைவடைந்துள்ளது.

இன்று மாலை முதல் தேர்தல் முடியும் வரை (ஏப்ரல் 23) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். துணை ராணுவப் படையினர் மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகள் ஓய்ந்து, 'நிசப்தமான பிரச்சாரம்' தொடங்கும். இது வாக்காளர்கள் தங்களின் தலைவரைத் தீர்மானிப்பதற்கான அமைதியான நேரம்.