நெல்லையில் தொடரும் வேட்டை... இதுவரை 81 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

 
நெல்லை தென்காசி குற்றவாளிகள்

நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 81 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகப் மாவட்டக் காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அரிவாள் வெட்டு கைது

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, வழிப்பறி மற்றும் தொடர் திருட்டு சம்பவங்கள் என கடுமையான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை

பொதுமக்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையிலும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.