காதல் மனைவி இறந்த துக்கம்... ஒரே மாதத்தில் கணவரும் தற்கொலை!
குலசேகரம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் அடுத்த ஒரே மாதத்தில் கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குலசேகரம், மணலோடை, புறாவிளை கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன். கூலி தொழிலாளியான இவருடைய மனைவி ஜெயா (36). இந்த தம்பதியர்க்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் ஜெனிஷா (20) பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் இவர்களது மகள் ஜெனிஷா, அதே பகுதியில் வசித்து வந்த ஜெனிஷை (22) காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, அதே கிராமத்தில் இருவரும் தனி வீட்டில் வசித்து வந்தனர். ஜெனிஷ் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். ஜெனிஷா திருநந்திக்கரை பகுதியில் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஜெனிஷா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜெனிஷாவின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் குலசேகரம் காவல் நிலையத்திலும், பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவமனை முன்பும் அப்போது போராட்டம் நடத்தினர்

இதையடுத்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய காதல் மனைவி இறந்ததில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த ஜெனிஷ், யாரிடமும் சரியாக பேசாமலும், சாப்பிடாமலும் கடந்த ஒரு மாதமாக இருந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஜெனிசை மீட்டு குலசேகரத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் ஜெனிஷ் பரிதாபமாக இறந்தார். காதல் மனைவி இறந்த ஒரே மாதத்தில் கணவரும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
