”உயிர் ஊஞ்சலாடுது” மனைவிக்கு மிரட்டல் விடுத்த கணவன்!! பகீர்!!

 
உமா மகேஸ்வரி

புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வருபவர்  உமா மகேஸ்வரி. இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பல்லவராயன்பத்தை கிராமத்தில் வசித்து வரும்   மாரிமுத்துவுடன்  பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கிய நிலையில்   இந்த காதலுக்கு உமா மகேஸ்வரி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இதனால் 2022 டிசம்பர் 4ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மாரிமுத்துவை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு மயிலாடுதுறையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார்.  

உமா மகேஸ்வரி

திருமணமான 4 மாதம் கழித்து  தாய் தனலெட்சுமியை தொடர்பு கொண்டு  தனது கணவன் சைக்கோ போல தன் மீது சந்தேகப்படுகிறான். அடித்து துன்புறுத்துவதாகவும் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.  மகளை காப்பாற்ற   தனலட்சுமி தனது உறவினர்களுடன் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். மாரிமுத்துவிடம் இருந்து தனலட்சுமியை பிரித்து அவரது தாய் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர்.   அப்போது வீட்டை விட்டா போகிறாய் நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் என பார்க்கிறேன் என மாரிமுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.  ஜூன் 20ம் தேதி இரவு 7 மணிக்கு   காரில் சில நபர்களுடன் வந்த மாரிமுத்து, ஆராயத்தெரு என்ற இடத்தில் தாயாருடன் சாலையில் நடந்துசென்று கொண்டிருந்த  உமாமகேஸ்வரியை வழிமறித்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுவிட்டனர்.

போலீஸ்

தனலட்சுமி அன்றே  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகார் அளித்து சுமார் ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில்   இதுவரை தனது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதனால்  நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது, கணவனை பிரிந்து தாயாருடன் வசித்தபோது, உமாமகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்து மாரிமுத்து பேசிய ஆடியோ பதிவினை  போலீசிடம் வழங்கியுள்ளார். உடனடியாக  தனது மகளை உயிருடன் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் உன் உயிர் ஊஞ்சலாடுது, மரணம் நெருங்குது என கணவர் உமா மகேஸ்வரிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!