கொடூரம்.... மனைவி, மகன், மகளை கொலை செய்து உடல்களுடன் 3 நாட்கள் உறங்கிய கணவர்!

 
ஜோதி

  உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தின் ரத்தன்பூர் கிராமத்தில் வசித்துவருபவர் ராம் லகன் கவுதம். இவர் மார்ச் 15ம் தேதி தனது மனைவி ஜோதி, 6 வயது மகள் பயல் , 3 வயது மகன் ஆனந்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். ஜோதிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கௌதம் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  14 ஆண்டுகளுக்கு முன் மும்பை கல்யாண்பூரில் பணிபுரிந்து வந்த ஜோதியை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் லக்னோவில் வசித்து வந்த நிலையில்  சரோஜினி நகர் கவுரி பஜார் பகுதியில் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்

ஜோதி

அதே பகுதியில்  வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.  மார்ச் 28ம் தேதி வியாழக்கிழமை தம்பதிகளிடையே பெரும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் கௌதம் நீண்ட நேரம் திட்டிக் கொண்டே இருந்துவிட்டு தூங்கிவிட்டார். நள்ளிரவு எழுந்து தூங்கிக் கொண்டிருந்த ஜோதியை  சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். தனது கைகளால் பாயல் மற்றும் ஆனந்த்தையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மறுநாள் காலை அவர் கதவை பூட்டிவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, அடுத்த 3  நாட்களுக்கும் அதே போல தினமும் காலை வேளைக்கு சென்று திரும்பினார்.  இவரது வீட்டில் இருந்து 2 நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையில் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர்.

ஆம்புலன்ஸ்

ஆனால் கொத்தனார் வழக்கம் காலை வேலைக்கு சென்றதையும் பார்த்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார்  அவரது வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது அவரது மனைவியும் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் பிணமாக காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொத்தனார்  தனது மனைவி, மற்றும் 2 குழந்தைகளை கொன்று,   3 நாட்கள் அவர்கள் உடல்கள் கிடந்த அதே அறையில் உறங்கிவிட்டு, தினமும் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார்.  போலீசார் அறையின் பூட்டை உடைத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web