வீடியோ வைரல்.. ஹெல்மெட் போடாத இளைஞர்.. மடக்கி பிடித்த போலீசார்.. ஆத்திரத்தில் கையை கடித்த கொடூரம்..!

 
சையத் ரபி

கர்நாடக மாநிலம் பெங்களூரு வில்சன் கார்டன் 10வது குறுக்குத் தெரு அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ​​ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர்.


போலீசார் வாகனத்தில் இருந்த சாவியை எடுத்தபோது, ​​ஆத்திரமடைந்த இளைஞர் சையத் ரபி திடீரென போக்குவரத்து காவலரின் கையை கடித்தார். இந்த சம்பவத்தை தலைமைக் காவலர் சித்தராமேஸ்வர கவுஜலகி வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹெல்மெட் அணியாமல் விதியை மீறிய போதிலும், சையது ரபி நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் போலீஸாரை கடித்துள்ளார். போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சையது ரபியை கைது செய்தனர். ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்க முயன்ற காவலரின் கையை இளைஞர் ஒருவர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web