அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை.. 20 சவரன் நகை, பணம் கொள்ளை..!

 
நித்யானந்தி

சூலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

Sulur, Coimbatore : சூலூர்: சூலுர் கண்ணம்பாளையம் பகுதியில், இரண்டு  வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியை நினைத்து தற்கொலை செய்து கொண்ட  ...

ஒரு மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். வீட்டில் நித்யானந்தி தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் நித்யானந்தி தூங்கி இருந்த அறையின் கதவை உடைத்து கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 2 லட்சம் பணத்தை பீரோவில் வைத்திருந்தார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் நித்யானந்தி வெளியே வராததால், பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது நித்யானந்தி வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூட்டை அவிழ்த்து விசாரித்தபோது, ​​நித்யானந்தி அழுது கொண்டே நடந்த சம்பவங்களை கூறினார்.

ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் பரிதாப பலி : கோவையில் நேர்ந்த சோகம்…  போலீசார் விசாரணை!! - Update News 360 | Latest Tamil News Online | Live News  | Breaking News Online ...

இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நித்யானந்தியிடம் விசாரணை நடத்தினர். போலீசார் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் செஞ்சேரிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web