பான்கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருமான வரித்துறையின் முக்கிய அறிவிப்பு... மிஸ் பண்ணாதீங்க!

 
வருமான வரி

ஆதார்-பான் கார்டு இணைப்பு தேதி முடிந்துவிட்டது  என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருமான வரித்துறை அமைச்சகம் மற்றொரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளது. காலவதியான பான் கார்டு உள்ளவர்களும்  இல்லாதவர்களும் ஜூலை 31க்குள் வரி செலுத்தலாம் என கூறப்படுகிறது.அதே நேரத்தில் என்ஆர்ஐகளின் பான் எண் தொடர்பான முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

பான் கார்டு காலாவதியானவர்களும் ஜூலை 31ம் தேதி வரை வரி செலுத்தலாம் என தற்பொழுது தெளிவுபடுத்தியுள்ளது. செயல்படாத பான் கார்டுகள் பான் கார்டு செயலிழக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது. அதனால்தான் பான் கார்டு வேலை செய்யாவிட்டாலும் ஐடி ரிட்டர்ன்களை தாக்கல் செய்யலாம். ஏற்கனவே பான்-ஆதார் இணைப்பை முடிக்காதவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துமுள்ளது.

பான் கார்டு

இருப்பினும், NRIகள் மற்றும் OCI களுக்கு ஆதார்-பான் இணைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அது தெளிவுபடுத்தியுள்ளது. ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாததால் பான் கார்டு செல்லாத வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) விரைவில் வரி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பல என்ஆர்ஐக்கள் தங்கள் பான் கார்டு வேலை செய்யவில்லை என்று புகார்களை எழுப்பியதை அடுத்து வருமான வரித்துறை ட்விட்டரில் இவ்வாறு பதிந்துள்ளது. NRIகள் மற்றும் இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) தங்கள் பான் கார்டு வேலை செய்யாததால் கவலை அடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

NRIக்கள் கடந்த மூன்று மதிப்பீட்டு ஆண்டுகளில் ஏதேனும் ஒரு வருடாந்த வருமானத்தை தாக்கல் செய்தாலோ அல்லது தங்களுடைய குடியிருப்பு நிலையை அறிவித்தாலோ PAN கார்டுக்கு மேப் செய்யப்பட்டுள்ளனர். தங்களுடைய குடியிருப்பு நிலையை தெரிவிக்காத என்ஆர்ஐகளின் பான் கார்டுகள் மட்டும் வேலை செய்யாது என தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்பவர்கள், சம்பந்தப்பட்ட வரி மதிப்பீட்டு அதிகாரியை (JAO) தொடர்பு கொண்டு தங்களுடைய குடியிருப்பு நிலையை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பான் நிர்மலா சீதாராமன்

ஆதார்-பான் இணைக்கப்பட்டிருக்கலாம். இதற்காக ரூபாய் 1000 அபராதம் செலுத்த வேண்டும். இதனை அதிகாரிகளிடம் கோரிக்கையாகவும் வைக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது ஆகவே கடைசி வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web