“வருகின்ற தகவல்கள் நம்பிக்கையளிக்கவில்லை...” - ஈஷா யோகா மையம்!
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த 80 வெளிநாட்டினர் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் குறித்த தகவல்கள் ஏமாற்றத்தை அளிப்பதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.
ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஆன்மீகப் பயணம் மற்றும் பயிற்சித் திட்டத்திற்காக நேபாளம் சென்ற 80 வெளிநாட்டினர் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டனர்.

இவர்கள் தங்கியிருந்த பகுதி சுமார் 45 முதல் 50 அடி உயரத்திற்குச் சேறும் மண்ணுமாக மூடிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள தற்போதைய நிலவரப்படி அவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என அப்பகுதி நிலவரம் அறிந்தவர்கள் கருதுகின்றனர்.
காத்மாண்டுவில் உள்ள மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களுடன் இணைந்து ஈஷா யோகா மையத்தின் பிரதிநிதிகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், சிக்கியுள்ள 80 பேரின் தற்போதைய நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
