மக்களே உஷார்.. உருவாகின்றது மிக்ஜான் புயல்.. எங்கு கரையை கடக்கிறது தெரியுமா..?

 
மிக்ஜாம் புயல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரப்போகிறது. வரும் 2 ஆம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 3 ஆம் தேதி வங்கக்கடலிலேயே புயலாக வலுப்பெறும் என சொல்லப்பட்டுள்ளது. தற்போது புயல் சின்னம் சென்னையிலிருந்து 800 கிமீ தொலைவில் புதுச்சேரியில் 790 கிமீ கிழக்கே மையம் கொண்டுள்ளது.

Balachandran, Southern Regional Director Of Meteorological Center, Said  That The Cyclone Forming In The Bay Of Bengal Will Move Towards North Tamil  Nadu. | TN Rain Alert: சென்னையை குறி வைக்கும் மிக்ஜாம் புயல்..

இந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் (தெற்கு ஆந்திரா) இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 4 தேதி மாலை இந்த புயல் கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

மிக்ஜாம்"புயல் வர தாமதம்

இந்த புயலுக்கு மிக்ஜாம் என இந்திய வானிலை மையம் பெயர் சூட்டியுள்ளது. இந்த புயல் தீவிரப்புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web