தவெக பெண்களை அவதூறாகப் பேசிய விவகாரம்... பொன்ராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 
பொன்ராஜ் பொன்ராஜ்

இது கோட், சூட் போட்ட திராவிட மாடல் 2.0 ஆட்சியாக இருந்து விடுமோ என்கிற அச்சம் மெல்ல பொதுமக்களிடையே எழ தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு தவெக அமைச்சர் மீதும் வரிசையாக அதிருப்திகள் வெளியாகின்றன. தவெக நிர்வாகிகள் மது போதையில் இருப்பதும், மிரட்டி பணம் பறிப்பதுமான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தவெகவுக்கு ஆதரவளித்துப் பேசிய பெண் தொண்டர்கள் குறித்து ஒரு காணொளிப் பக்கத்தில் மிகவும் இழிவான முறையில் பிரபல அரசியல் விமர்சகரான பொன்ராஜ் பேசியது பரபரப்பானது. 

யூடியூப் பக்கத்தில் தவெக பெண் ஆதரவாளர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாக பொன்ராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி, பல்வேறு மகளிர் அமைப்புகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் பொன்ராஜ்

பெண்களைப் பொதுவெளியில் இழிவுபடுத்திய அரசியல் விமர்சகர் பொன்ராஜின் இந்த செயலைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்ட சட்டப் பிரிவு மற்றும் முக்கிய நிர்வாகிகள் தரப்பில் உள்ளூர் காவல் நிலையத்தில் முறைப்படி ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது.

தவெகவினர் அளித்த அந்தப் புகாரின் உண்மை விபரங்களை முறைப்படி ஆராய்ந்த கடலூர் புதுநகர் காவல் நிலையப் போலீசார், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது பெண்களை அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட மொத்தம் 4 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் முறைப்படி வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தவெக பாலியல் காதல் கொலை கள்ளக்காதல்

மாவட்டக் காவல் துறையினரால் பதியப்பட்டுள்ள இந்த அவசர வழக்குத் தொடர்வால், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அசாதாரணச் சூழல் நிலவி வருகிறது. 

இந்த அவதூறு விவகாரம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள நபர்களுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் கடலூர் புதுநகர் தனிப்படை போலீசார் தீவிர புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்குப்பதிவு விபரங்கள், பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.