பொண்ணு கல்யாணத்துக்கு சேத்து வச்ச நகை திருடு போயிடுச்சு.. கதறும் கார் டிரைவர்..!!

மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 5 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சிவகுமார். இவருக்கு கெஜலட்சுமி என்கிற மனைவியும் லட்சுமி என்கின்ற மகளும் உள்ளனர். மகள் லட்சுமி சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் சிவக்குமார் கடந்த 23 ந்தேதி பேர்ணாம்பட்டு அடுத்த மசிகம் பகுதியில் உள்ள மனைவியின் தம்பி பாபு வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்று நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் தனது மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து சிவக்குமார் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணித்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து கார் ஓட்டுநர் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.